PulseNews
தொழில்நுட்பம்

மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!

தமிழ்நாடு அரசு புதிய பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மதுரை மண்டலத்திற்கு ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் 20 புதிய BS-VI பேருந்துகள் ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

புதிய பேருந்துகளின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (25.08.2026) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் வசதிக்காக ரூ. 290.08 கோடி மதிப்பிலான 250 புதிய பேருந்துகளின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சார்பில், மதுரை மண்டலத்திற்கு 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக ரூ. 9.20 கோடி திட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட 20 புதிய BS-VI ரக டீசல் பேருந்துகளை, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு வசதிகள், அவசரகால உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் BS-VI தொழில்நுட்பக் கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். இப்புதிய பேருந்துகள் அனைத்தும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் இயக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்க முழு தயார் நிலையில் உள்ளன.

இயக்கப்படும் வழித்தடங்கள்:

மதுரை மண்டலத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருப்புவனம், செக்கானூரணி, சோழவந்தான், பொன்மேனி ஆகிய கிளைகள் மூலமாக பின்வரும் முக்கிய வழித்தடங்களில் இந்த 20 புதிய பேருந்துகளும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளன.

பெரியார் பேருந்து நிலையம் – மங்கலம்பட்டி (2 பேருந்துகள்)

பெரியார் பேருந்து நிலையம் – ஆஸ்டின்பட்டி

பெரியார் பேருந்து நிலையம் – சொட்டத்தட்டி

பெரியார் பேருந்து நிலையம் – குரண்டி

சின்ன கண்மாய் – கைத்தறி நகர்

பார்க் டவுன் – நிலையூர்

அண்ணா பேருந்து நிலையம் – சாமநத்தம்

அணுப்பானடி – மகாலட்சுமி நகர்

பெரியார் பேருந்து நிலையம் – சமயநல்லூர்

பெரியார் பேருந்து நிலையம் – பிரமனூர்

பெரியார் பேருந்து நிலையம் – அதிகரை

எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் – பாலாமூப்பன்பட்டி

பெரியார் பேருந்து நிலையம் – விக்கிரமங்கலம்

பெரியார் பேருந்து நிலையம் – நாட்டார்பட்டி

பெரியார் பேருந்து நிலையம் – நாட்டார்மங்கலம்

பெரியார் பேருந்து நிலையம் – புதுக்குளம்

பெரியார் பேருந்து நிலையம் – குருவித்துறை

பெரியார் பேருந்து நிலையம் – கருப்பட்டி

பெரியார் பேருந்து நிலையம் – மஞ்சம்பட்டி

இப்புதிய BS-VI பேருந்துகளின் இயக்கத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவை கிடைக்கும். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (மதுரை) மேலாண்மை இயக்குநர் சரவணன், பொது மேலாளர் பாலமுருகன், துணை மேலாளர்கள், கிளை மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு அரசு புதிய பேருந்துகளை இயக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மண்டலத்திற்கு 9.20 கோடி ரூபாய் செலவில் 20 புதிய பிஎஸ்-VI (BS-VI) ரகப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய பேருந்து சேவையை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பொதுமக்களின் வசதிக்காக 290.08 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பேருந்து சேவைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று (25.08.2026) தொடங்கி வைத்தார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology