PulseNews
தொழில்நுட்பம்

மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான பிஇ 6 ஸ்போர்ட்டெக் (Mahindra BE 6 Sporteq) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் ரூ. 11.45 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளதைக் கேட்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால், இந்த விலையில் ஒரு நிபந்தனை உள்ளது. முழு வாகனத்திற்கும் இந்த விலை பொருந்தாது; இது பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் (BaaS) என்ற தனித்துவமான திட்டத்தின் அடிப்படையிலானது. இந்த முறையில், கார் உங்களுக்குச் சொந்தமாகும், ஆனால் அதிலுள்ள பேட்டரியை நீங்கள் தனியாக வாடகைக்கு எடுக்க வேண்டும். ஆக, இந்த காரைப் பயன்படுத்துவதற்கான மொத்த செலவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதன் முழுமையான விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம்.

ரூ. 11.45 லட்சம் மட்டுமே

BaaS மாடலின் கீழ், மஹிந்திரா பிஇ 6 ஸ்போர்டெக் காரின் ஆரம்ப நிலை அல்லது மிகவும் மலிவான வேரியண்ட்டான ONE மாடலின் விலை ரூ. 11.45 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் கார் மட்டுமே அடங்கும், பேட்டரி அல்ல. பேட்டரிக்கான வாடகையாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 3.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் பேட்டரியுடன் சேர்த்து முழு வாகனத்தையும் வாங்க விரும்பினால், 59 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட அதே ONE வேரியண்டின் விலை ரூ. 19.45 லட்சமாக இருக்கும். எனவே, ஆரம்ப விலையை மட்டுமே பார்த்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல; எதிர்காலத்தில் பேட்டரிக்கான வாடகை கூடுதல் செலவாக மாறும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

தினசரி பயன்பாட்டிற்கான செலவு என்னவாக இருக்கும்?

ஒரு வாடிக்கையாளர் தினமும் தோராயமாக 60 கிலோமீட்டர் பயணம் செய்வார் என்றும், பேட்டரிக்கான கடன் காலம் 8 ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் கணக்கிட்டு மஹிந்திரா இந்த BaaS விலையை நிர்ணயித்துள்ளது. நீங்கள் தினமும் 60 கிலோமீட்டர் பயணம் செய்தால், கிலோமீட்டருக்கு ரூ. 3.75 வீதம் கணக்கிடும்போது, உங்களின் மாதாந்திர பேட்டரி வாடகை செலவு தோராயமாக ரூ. 6,750 ஆக இருக்கும். அதாவது, நீங்கள் அதிகமாக வாகனத்தை ஓட்டினால், இந்த மாதாந்திர செலவும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

உங்களிடம் ஆரம்ப முதலீடு குறைவாக இருந்து, எலெக்ட்ரிக் வாகனத்தை அனுபவிக்க விரும்பினால், ரூ. 11.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த BaaS மாடல் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் வாகனத்தை நீண்ட காலத்திற்கு வைத்திருக்கப் போகிறீர்கள் மற்றும் அடிக்கடி அதிகம் ஓட்டுகிறீர்கள் என்றால், ஆரம்பத்திலேயே ரூ. 19.45 லட்சம் கொடுத்து பேட்டரியுடன் கூடிய முழு வாகனத்தையும் வாங்குவதே சிறந்த தேர்வாக அமையும். இது உங்களுக்கு மாதாந்திர வாடகை செலுத்தும் சுமையை நீக்கும். இந்த புதிய கார்களுக்கான டெலிவரி வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
PulseNews சுருக்கம்

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய பிஇ 6 ஸ்போர்ட்டெக் (BE 6 Sporteq) மின்சார எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை 11.45 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த விலையில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. முழு வாகனத்தின் விலையாக இது கருதப்படாது; மாறாக, பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் (BaaS) என்ற திட்டத்தின் கீழ் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology