PulseNews
தொழில்நுட்பம்

Huawei Maextro S800 Luxury Car: Audi, BMW எல்லாம் ஓரம் போங்க.! அதிரிபுதிரியான காரை இறக்கிய ஹுவே; வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.!

சொகுசுக் கார் என்றாலே, உலகில் மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8 போன்ற கார்களே உதாரணங்களாக இருந்து வந்தன. ஆனால் இப்போது, ​​அதையெல்லாம் உடைக்க ஒரு புதிய கார் வந்துவிட்டது. ஆம், ஹுவே மற்றும் ஜேஏசி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவான மேக்ஸ்ட்ரோ எஸ்800 கார், சீனாவில் சொகுசு செடான் பிரிவில் மற்ற முக்கிய பிராண்டுகளின் விற்பனையை மிஞ்சியுள்ளது. இந்த கார் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அதன் உச்சகட்ட சொகுதான். அவை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உலக டாப் பிராண்டுகளையே மிஞ்சிய மேக்ஸ்ட்ரோ S800-ன் விற்பனை

சீனாவின் 1.00,000 டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட செடான் பிரிவில், மேக்ஸ்ட்ரோ எஸ்800 அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்துள்ளது என்பதே அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். சமீபத்திய தரவுகளின்படி, இந்த கார் விற்பனையில் மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ், போர்ஷே பனமேரா மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போன்ற கார்களை மிஞ்சியுள்ளது. இதனால்தான், இது இந்த முக்கிய சொகுசு பிராண்டுகளுக்கு சரியான போட்டியாளராகக் கருதப்படுகிறது.

3 திரைகள், பூஜ்ஜிய ஈர்ப்பு இருக்கைகள்

இந்த காரின் உட்புறம் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3 பெரிய திரைகள் கொண்ட அமைப்பு உள்ளது. இது, பின் இருக்கைப் பயணிகள் தங்களுக்கென உள்ள தனித்தனித் திரைகளில் தாங்கள் விரும்புவதை கண்டு ரசிக்கலாம். மேலும், இதில் உள்ள ஜீரோ-கிராவிட்டி பின் இருக்கைகள், நீண்ட பயணங்களின் போது உடல் அழுத்தத்தை குறைத்து, பயண வசதியை மேம்படுத்துகின்றன. தேவைப்படும்போது மேலே உயர்த்தக்கூடிய, உள்ளிழுக்கக்கூடிய லேசர் புரொஜெக்ஷன் திரையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

அசத்தலான வடிவமைப்பு

இந்த கார், சுமார் 5,480 மில்லிமீட்டர் நீளத்தையும், 3,370 மில்லிமீட்டர் வீல்பேஸையும் கொண்டிருப்பதால், இது மிகவும் விசாலமாக உள்ளது. இதில் இரட்டை மில்லியன் பிக்சல் ஹெட்லைட்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பொதுவாக மிகவும் விலையுயர்ந்த ஹைப்பர்-லக்சுரி கார்களில் மட்டுமே காணப்படும் ஒரு அம்சமான, கையால் மெருகூட்டப்பட்ட சிறப்பு கிரிஸ்டல் ஹெட்லைட்களைக் கொண்ட ஒரு வேரியன்ட்டும் உள்ளது. கதவுக் கைப்பிடிகளும் ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளன. இது, இந்த காருக்கு ஒரு மிகவும் ப்ரீமியமான தோற்றத்தை அளிக்கிறது.

நீண்ட தூர ரேஞ்ச் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்

மேக்ஸ்ட்ரோ எஸ்800 இரண்டு வகைகளில் வருகிறது. ஒரு முழு மின்சாரப் பதிப்பு மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர். மின்சாரப் பதிப்பில் 97 kWh பேட்டரி உள்ளது. இது ஒரே சார்ஜில் சுமார் 700 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடியது. குறிப்பிடத்தக்க வகையில், இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், பெரும்பாலான சொகுசு மின்சாரக் கார்களை விட வேகமாக, அதாவது, வெறும் 10 முதல் 12 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது.

விலை என்ன.?

சீனாவில் ஹுவே மேக்ஸ்ட்ரோ எஸ்800-ன் விலை 7,00,000 முதல் 1,00,000 யுவான் வரை உள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 85 லட்சம் ரூபாய் முதல் 1.25 கோடி ரூபாயாகும். இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Huawei Maextro S800 Luxury Car: Audi, BMW எல்லாம் ஓரம் போங்க.! அதிரிபுதிரியான காரை இறக்கிய ஹுவே; வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.!
PulseNews சுருக்கம்

மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ8 போன்ற முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு போட்டியாக, ஹுவே மற்றும் ஜேஏசி நிறுவனங்கள் இணைந்து மேக்ஸ்ட்ரோ எஸ்800 சொகுசு காரை அறிமுகப்படுத்தியுள்ளன. சீனாவில் இந்த செடான் கார், மற்ற பிரபலமான பிராண்டுகளின் விற்பனையை முறியடித்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்த காரின் மிக உயரிய சொகுசு வசதிகளே இதன் அபரிமிதமான வரவேற்பிற்கு காரணமாக அமைகிறது. சர்வதேச அளவில் சொகுசு கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிறுவனங்களுக்கு இந்த புதிய கார் பலத்த சவாலாக மாறியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology