நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
திருப்பூர் தாராபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மருத்துவரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 65 வயதான விக்டோரியாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர் இல்லாத நிலையில் ரூ50 ஆயிரம் மதிப்பிலான இரண்டு ஊசிகளை செவிலியர்கள் செலுத்தியதாகவும், தொலைபேசி மூலம் மருந்துகள் குறித்து மாற்றி மாற்றி மருத்துவர் அறிவுறுத்தியதால் குழப்பம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே விக்டோரியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, விக்டோரியா (65) என்ற பெண் நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த நிலையில், மருத்துவர் இல்லாத நேரத்தில் செவிலியர்கள் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஊசிகளைச் செலுத்தியதே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், தொலைபேசி மூலம் மருத்துவர் தவறான மருந்துகளைப் பரிந்துரைத்ததாகக் கூறி, அவர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.