உலகளவில் மைல்கல்லை எட்டிய ‘தி ஒடிஸி’ படம்!
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படம் கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மேட் டிமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சின்காபி’(Syncopy) என்ற பேனரில் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இப்படத்தைத் தயாரித்திருக்க யுனிவர்ஸல் பிக்சர்ஸ் வெளியிட்டது. இப்படம் கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ‘தி ஒடிஸி’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த கதை ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது. இப்படம் முதல் முறையாக ஒட்டுமொத்த படம் முழுவதும் ஐமேக்ஸ் 70எம்எம்(70mm) கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் உலகளவில் ரூ.9,500 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டு உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்த ஐந்தாவது படமாக இப்படம் மாறியுள்ளது. இதற்கு முன் டாய் ஸ்டோரி 5, மைக்கேல், தி சூப்பர் மரியோ கேலக்ஸி மற்றும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே ஆகியவை படங்கள் ஆகும். அதே போல் நோலன் படங்களில் இப்படம் மூன்றாவது 1 பில்லியன் டாலரை கடந்த படமாக அமைந்துள்ளது. இதற்கு முன் ‘தி டார்க் நைட்’, ‘தி டார்க் நைட் ரைஸஸ்’ ஆகிய படங்கள் இந்த வசூலை எட்டியிருந்தது.

கடந்த மாதம் 17-ம் தேதி வெளியான கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்படம், உலகம் முழுவதும் 9,500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஹோமரின் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், இந்த ஆண்டில் உலகளவில் 1 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த ஐந்தாவது திரைப்படமாக மாறியுள்ளது.
நோலனின் இயக்கத்தில் உருவான படங்களில், ‘தி டார்க் நைட்’ மற்றும் ‘தி டார்க் நைட் ரைஸஸ்’ படங்களுக்குப் பிறகு 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய மூன்றாவது படம் இதுவாகும். ஐமேக்ஸ் 70எம்எம் கேமராவில் முழுமையாகப் படமாக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.