Madurai ; 3 மாதத்திற்கு முன்பே மகனை புதைச்சுட்டேன்.. வாக்குமூலமாக அதிர்ச்சி தகவல்கள் கொடுத்த தாய் !

மதுரையில் மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற கொடூர மகனை அடித்து கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய் கைது - 3 மாதங்களுக்கு பின் மகனை கொலை செய்ததை வாக்குமூலமாக கூறிய தாய்.

மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார்.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50) இவரது கணவன் 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த ராஜா தொடரந்து மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மனைவி ராஜாவை விட்டு பிரிந்துசென்று தனது தாயாருடன் இருந்துவந்துள்ளார். இதனிடையே அய்யம்மாளின் மகன் ராஜா மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் தாயார் அய்யம்மாள் மற்றும் சகோதரி மகாராணியுடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். ராஜா மீது பல்வேறு குற்றவழக்குகள் காரணமாக அடிக்கடி சிறைக்கும் சென்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராஜா மது போதையில் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு சென்று தாய் அய்யம்மாளிடம் தகராறு செய்து ஆபாசமாக பேசி தாக்கியதோடு தாயாரிடமே தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மகன் ராஜாவை அய்யம்மாள் தடுத்தபோதும் தொடர்ந்து தாக்கி தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யம்மாள் மதுபோதையில் இருந்த மகன் ராஜாவை கீழே தள்ளிவிட்டதோடு அருகில் கிடந்த கம்பியை எடுத்து தலை, கை மற்றும் உடல் முழுவதும் மாறி மாறி அடித்துள்ளார்.

மகனை கொலை செய்து புதைத்த தாய்

இதில் ரத்தம் முழுவதும் வெளியேறிய நிலையில் ராஜா உயிரிழந்துள்ளார். இதையறிந்த அய்யம்மாள் ராஜாவின் உடலை தனது வீட்டின் பின்புறத்தில் பாத்ரூம் கட்டுவதற்காக தோண்டிவைத்திருந்த குழியில் ராஜாவின் உடலை இழுத்துசென்று புதைத்து மூடி அதன் மீது விறகுக்கட்டைகளை வைத்து மறைத்துள்ளார். மேலும் வீட்டின் வாசலில் கிடந்த இரத்தத்தை தண்ணீர் ஊத்தி கழுவி விட்டு இயல்பாக இருந்துவந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக மகனை கொலை செய்து புதைத்த நிலையில் நாள்தோறும் மகன் ராஜா குறித்து கேட்பவர்களிடம் திருப்பூர் சென்றுள்ளதாக கூறிவந்துள்ளார்.

கிராமத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்

பின்னர் கிராமத்தில் உள்ளவர்களிடம் அய்யம்மாள் சில நேரங்களில் தனது மகன் ராஜா குறித்து முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து கிராமத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இதையறிந்த அய்யம்மாள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அய்யம்மாள் தனது மகனை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் கீழ் காவல்துறையினர் அய்யம்மாளை வீட்டிற்கு அழைத்துசென்று சம்பவம் குறித்தும் விசாரணை நடத்திய நிலையில் ராஜாவை புதைத்த இடத்தில் உடலை கிழக்கு வட்டாச்சியர் முன்பாக உடல் தோண்டப்பட்டு தலை மற்றும் எலும்புகள் எடுக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். பின்னர் உடலில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் மனைவி மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அய்யம்மாளை கைது செய்து அழைத்துசென்றனர். மதுரையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகனை அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டின் பின்புறம் புதைத்து வைத்து மூன்று மாதமாக வீட்டிலேயே தங்கிய தாய் தானே மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்து கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யம்மாள். இவரது கணவர் கணேசன் நான்கு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அய்யம்மாள் தனது மகன் ராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த மகன் ராஜா, தாயிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யம்மாள், தனது மகனை அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது இது குறித்த தகவல் வெளியாகி அய்யம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.