PulseNews
தமிழகம்

பா.விஜய் பேச பேச நெகிழ்ச்சியால் எமோஷ்னலான சூரி!

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பாடலாசிரியர் பா.விஜய், “சில படங்களில் பணிபுரிய வேண்டும் என்பது நமக்கு பெருமை சேர்க்கும். ஆனால் சில படங்கள் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும். அப்படிப்பட்ட படைப்பு தான் இந்த மண்டாடி. நான் பயணிக்கும் காலகட்டத்தில் கவனிக்கும் ஒரு விஷயம், இதுவரை வெளிவராத ஒரு அற்புதமான கதைகளத்தை திரைவடிப் படுத்த வேண்டும் என்ற தாகத்தோடு இருக்கும் ஒரு இயக்குநரும் ஒரு கதைகளத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற தீவிரத்தோடு இருக்கும் ஒரு தயாரிப்பாளரும் பல நேரங்களில் சந்தித்துக்கொள்வதே இல்லை. அப்படி சந்தித்துக்கொண்டால் என்ன ஆகும் என்கிற விளைவு தான் இந்த மண்டாடி. தயாரிபாளர் எல்ரெட் சாருக்கு ஒன்று சொல்கிறேன், இந்த படம் காலத்துக்கும் தாண்டி உங்கள் பெயரை நின்று பேசும். இயக்குநர் மதிமாறன் வெறித்தனமான ஒரு உழைப்பை போட்டிருக்கிறார். அவருடைய உழைப்பை யாருடன் ஒப்பிடுவது எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் மதிமாறன் மாதிரி உழைத்திருக்கிறார் என யாரையாவது பார்த்து சொல்லலாம். சூரியை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஒரு சாமானியனால் கூட சினிமாவில் நுழைந்து ஒரு சரித்திரத்தை பிடிக்க முடியும் என்பதற்கான சாட்சியாக பார்க்கிறேன். அவருடைய வெற்றி சாதாரண வெற்றி கிடையாது. திரை கலைஞராக ஜெயிக்கலாம், எத்தனையோ பேர் அப்படி ஜெயிக்கிறார்கள். ஆனால் வியாபர உலகத்தையும் சேர்த்து ஜெயிக்க வைக்கும் வித்தையிலும் அவர் ஜெயித்து விட்டார், இந்த படம் மூலமாக. அவருக்காக ஒரு கவிதையை எழுதி வந்தேன். ‘நேற்று வரைக்கும் நீ காண்போர் கைதட்ட காற்றில் பறந்த காகிதம். இன்று, வலிக்க வலிக்க தன்னைத்தானே வடித்துக் கொண்ட ஆயுதம். ஒரு காலத்தில் கயிற்றில் தொங்கிகொண்டு சுவற்றில் பெயிண்ட் அடித்தாய், இன்று உன்னை சினிமா உச்சத்தில் உன்னை தூக்கி வைத்து தன் தோளில் ஊஞ்சல் கட்டி தாலாட்டிக்கொண்டிருக்கிறது. என்னுடைய தமிழால் வாழ்த்துகிறேன் நண்பா. வெற்றிகளின் சிகரங்களில் ஏறி, வீர பவனி வருக என் சூரி. வாழ்க வாழ்த்துகள்’ என்றார். இந்த கவிதையை கேட்ட சூரி மிகவும் எமோஷ்னலாக கண்கலங்கிய படி எழுந்து நின்று கைகூப்பி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பா.விஜய், “இந்த படம் நிச்சயமாக நின்று பேசும். உலகத்தில் கிறிஸ்டோபர் நோலன் போன்ற பெரிய இயக்குநர்களை எல்லாம் போற்றி புகழ்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி நம்முடைய தமிழ் சினிமாவில் இயக்குநர் மதிமாறம் உச்சகட்டத்தை தொடுகிற திரைக்காவியத்தை செதுக்கியிருக்கிறார்” என்றார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பா.விஜய் பேச பேச நெகிழ்ச்சியால் எமோஷ்னலான சூரி!
PulseNews சுருக்கம்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி நடிக்கும் திரைப்படம் 'மண்டாடி'. வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடலில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சத்யராஜ், ரவீந்திரா விஜய் மற்றும் அச்யுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பா.விஜய் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நடிகர் சூரி நெகிழ்ச்சியடைந்து உணர்ச்சிவசப்பட்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu