வங்கியில் அடகு வைத்த 2,179 கிராம் தங்க நகைகள் அபேஸ்: கிடைத்த பணத்தை ஆன்லைன் கேமில் விட்ட உதவி மேலாளர்? பின்னணி என்ன?
IOB வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2,179 கிராம் தங்க நகைகள் மாயமான சம்பவத்தில் சுமார் 21 வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா, வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று வேறு இடங்களில் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ஐஓபி வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2,179 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பாக அந்த வங்கியின் உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது. சுமார் 21 வாடிக்கையாளர்களின் நகைகளை அவர்களின் அனுமதியின்றி எடுத்துச் சென்று, வேறு இடங்களில் அடமானம் வைத்து அவர் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அடமானம் மூலம் பெற்ற பணத்தை, ஆன்லைன் விளையாட்டுகளுக்காகவும் தனது சொந்தத் தேவைகளுக்காகவும் அவர் செலவு செய்துள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.