அரசு மானிய விலையிலான நிலக்கடலை விதைகளுக்குத் தட்டுப்பாடு..!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மானிய விலையிலான விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காரியாபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காரியாபட்டி பகுதிக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததே விதைகள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மானிய விலையில் வழங்கப்படும் நிலக்கடலை விதைகள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இந்த தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்கும் விதமாக, காரியாபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு என உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததே இந்த விதை தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.