PulseNews
தமிழகம்

“காணாமல் போன மலைகளை தெரியுமா?” - புகைப்படத்தை காண்பித்துப் பேசிய அமைச்சர் பிரபு!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (25.08.2026) நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது இயற்கை வளங்கள் துறை சார்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பின. அதற்கு பதிலளித்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு, “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரம் உள்ள பிரம்மரிசி மலை 2006 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஏக்கர் பரப்பில் 25 மீட்டர் உயரம் வரை வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் அறநிறை கிராமத்தில் 90 மீட்டர் உயரமுள்ள கோனாரிப்பாளையம் மலை 2004ஆம் ஆண்டு முதல் சுமார் 8 ஏக்கர் பரப்பரளவில் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போயிடுச்சு. பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் கிராமத்தில் 25 மீட்டர் உயரமுள்ள செங்குணம் மலை 2026 ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஏக்கர் பரப்பில் 20 மீட்டர் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போயிடுச்சு. மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பில் 50 மீட்டர் உயரத்தில் ஒரு சர்க்கரைபேர் மலை இருந்திருக்கு. ஆனா 2003க்கு பிறகு அந்த மலையில் 7.5 ஏக்கர் காணாமல் போயிடுச்சு. மதுரை மாவட்டத்தில் கொண்டையம்பட்டி கிராமத்தில் 35 மீட்டர் உயரமுள்ள குன்று 2021க்கு பிறகு சுமார் ஐந்து ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போயிடுச்சு. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்பேட்டை கிராமத்தில் 10 மீட்டர் உயரமுள்ள குன்று 2024ஆம் ஆண்டு முதல் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போயிடுச்சு. ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் 16.16 ஹெக்டேர் பரப்பளவில் 70 மீட்டர் உயரத்தில் அனந்தலை மலைன்னு ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் 1998க்கு பிறகு இந்த மலை காணாமல் போயிடுச்சு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பரளவில் 6 மீட்டர் உயரத்தில் குன்று இருந்திருக்கிறது. ஆனால் 2022ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த குன்றே காணாமல் போயிடுச்சு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முத்தூர் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பரப்பில் 10 மீட்டர் உயரத்தில் குன்று இருந்திருக்கிறது. ஆனால் 2022ஆம் ஆண்டு முதல் இந்த குன்றே காணாமல் போயிடுச்சு. தென்காசி மாவட்டத்தில் அரியநாயகபுரம் கிராமத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவில் 50 மீட்டர் உயரத்தில் கோணமலை இருந்திருக்கிறது. ஆனால் 1999க்கு பிறகு இந்த குன்றே காணாம போயிடுச்சு” என்று ஒவ்வொரு மலைகளின் புகைப்படத்தையும் காண்பித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “இப்போது நான் சொன்னது சாம்பிள் தான். இந்த மாதிரி பல குன்றுகள் காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் இந்த மாதிரி காணாமல் போன மலைகள் எல்லாம் சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது” என்று கூறினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“காணாமல் போன மலைகளை தெரியுமா?” - புகைப்படத்தை காண்பித்துப் பேசிய அமைச்சர் பிரபு!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, தொழில் துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (25.08.2026) நடைபெற்றது. அப்போது இயற்கை வளங்கள் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிரபு பதிலளித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் பிரபு, காணாமல் போனவர்கள் குறித்த அறிவிப்புகளைப் பார்த்திருப்பீர்கள் என்று குறிப்பிட்டு, காணாமல் போன மலைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று வினவினார். இதனைத் தொடர்ந்து, அவர் புகைப்படங்களைக் காண்பித்து தனது விளக்கத்தை அளித்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu