ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்
புற்றுநோய் பாதிப்புகள் 2020ஆம் ஆண்டில் 68,750 ஆக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022ஆம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 96,486 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் 68,750 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2021-ல் 76,968 ஆகவும், 2022-ல் 89,265 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024-ம் ஆண்டில் 96,486 ஆகவும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்த பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.