PulseNews
தமிழகம்

காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!

வெயிலில் நிழல் தரும் கார்... ஆபத்தாக மாறும் எச்சரிக்கை! காருக்குள் மறந்து கூட ‘இவற்றை’ விட்டுச் செல்லாதீர்கள்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் கார் என்பது வெறும் பயணத்திற்கான வாகனம் மட்டுமல்ல, அது நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பிரித்தெடுக்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது. தினமும் வேலைக்குச் செல்வது, குடும்பத்துடன் பயணம் செய்வது என பல நேரங்களில் நமது இரண்டாவது வீடாகவே கார் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, அவசர அவசரமாகக் காரை விட்டு இறங்கும்போது நமது பைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் காருக்குள்ளேயே வைத்துவிட்டுச் செல்லும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால், இந்த ஒரு சிறு கவனக்குறைவு உங்கள் பணத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மாபெரும் அச்சுறுத்தலாக முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக வெயில் காலத்தில் அல்லது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் போது, வெளிப்புற வெப்பத்தை விட காரின் உட்புற வெப்பநிலை மிக வேகமாகப் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் காருக்குள் நீங்கள் விட்டுச் செல்லும் சில பொருட்கள் பாழாவதுடன், வெடித்துச் சிதறும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.

காரை லாக் செய்துவிட்டு இறங்குவதற்கு முன், மறக்காமல் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்:

1. ஆபத்தாக மாறும் மருந்துகள்!

தினசரிப் பயன்படுத்தும் மாத்திரைகள், இன்சுலின் அல்லது சிரப் போன்ற மருந்துகளைக் காருக்குள் விட்டுச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான வெப்பம் மருந்துகளின் வீரியத்தையும், வேதியியல் அமைப்பையும் முற்றிலுமாகப் பாதித்துவிடும். பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையைத் தாண்டி வெப்பமடையும் போது, அம்மாத்திரைகள் பயங்கற்றதாகவோ அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவோ மாறக்கூடும்.

2. லேப்டாப், மொபைல் போன்கள் - பழுதாகும் ஆபத்து & திருடர்களின் பார்வை!

மொபைல் போன், லேப்டாப், டேப்லெட், பவர் பேங்க் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அதிக வெப்பமடையும் காருக்குள் வைக்கக் கூடாது.

பேட்டரி பாதிப்பு: அதிக வெப்பத்தால் லித்தியம் பேட்டரிகள் வீங்கி, சாதனங்கள் பழுதாகலாம்; சில சமயங்களில் வெடிக்கும் அபாயமும் உண்டு.

திருட்டுப் பயம்: காருக்குள் வெளியே தெரியும் வகையில் இருக்கும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் திருடர்களுக்குப் 'ரெட் கார்ப்பெட்' வரவேற்பு கொடுப்பது போலாகும். காரின் கண்ணாடியை உடைத்து நொடிப் பொழுதில் இவற்றைத் திருடிச் சென்றுவிடுவார்கள்.

3. சன்ஸ்கிரீன் & அழகு சாதனப் பொருட்கள்:

வெப்பமான காருக்குள் சன்ஸ்கிரீன் கிரீம்களை வைப்பதால், அதில் உள்ள வேதிப்பொருட்கள் பிரிந்து அதன் செயல்திறன் முற்றிலும் குறைந்துவிடும். மேலும், வெப்பத்தின் அழுத்தத்தால் டியூப் அல்லது பாட்டில்கள் வெடித்து, காரின் லெதர் சீட்கள் மற்றும் உட்புறப் பகுதிகளில் கொட்டி மறையாத கறைகளையும் சேதத்தையும் ஏற்படுத்திவிடும்.

4. பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் - மெல்லக் கொல்லும் விஷம்?

காரில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது பலரின் வழக்கம். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நிற்கும் காருக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரைக் குடிப்பது மிகவும் ஆபத்தானது.

வேதிப்பொருள் கசிவு: பிளாஸ்டிக்கில் உள்ள 'பிஸ்பெனால் ஏ' (BPA) மற்றும் நுண் ரசாயனங்கள் வெப்பத்தின் காரணமாகத் தண்ணீரில் கரையத் தொடங்குகின்றன. இது உடலுக்குப் பல தீவிர உபாதைகளைத் தரும்.

பாதுகாப்பான மாற்று: காரில் தண்ணீர் வைக்க விரும்புபவர்கள் பிளாஸ்டிக்கு பதிலாக ஸ்டீல் அல்லது செப்பு பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.

5. பர்ஸ் மற்றும் ஹேண்ட்பேக் - சீட்டில் வைக்காதீர்கள்!

காரைப் பார்க் செய்த பிறகு, பர்ஸ், பணப் பை, மொபைல் போன் போன்றவற்றை இருக்கைகளின் மீது வெளிப்படையாக வைத்துவிட்டுச் செல்லாதீர்கள். ஒரு சிறிய கைப்பை வெளியே இருந்து பார்த்தால் தெரிந்தால் கூட, அது குற்றவாளிகளை ஈர்க்கப் போதுமானது. பண இழப்புடன் சேர்த்து, காரின் கண்ணாடியையும் மாற்ற வேண்டிய கூடுதல் செலவு ஏற்படும். பொருட்களைக் காரில் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவற்றைப் பார்வையில் படாதவாறு டிக்கியில் (Boot Space) பூட்டி வைப்பதே நல்லது.

சிறிய கவனக்குறைவு... மாபெரும் இழப்பு!

காரில் தவறான பொருட்களை விட்டுச் செல்வது வெறும் பொருள் இழப்பு மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் பெரிய ஆப்பைய வைக்கும்.

மருந்துகளின் வீரியம் குறைவதால் உடல்நலக் கேடு ஏற்படும்.

பழுதாகும் எலக்ட்ரானிக் சாதனங்களைச் சரிசெய்ய அல்லது புதியது வாங்க பல்லாயிரம் ரூபாய் செலவாகும்.

திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் மன உளைச்சலும், ஈடுசெய்ய முடியாத ஆவண இழப்பும் ஏற்படும்.

இறங்குவதற்கு முன் "செக்" பண்ணுங்க!

இனி காரைப் பார்க் செய்து லாக் செய்வதற்கு முன், ஒரு 10 வினாடிகள் ஒதுக்கி காரின் உட்புறத்தைச் சோதிக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்:

முன் மற்றும் பின் இருக்கைகள், டாஷ்போர்டு பகுதிகளை ஒருமுறை பார்வையிடுங்கள்.

மொபைல், லேப்டாப், பர்ஸ், மருந்துகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்.

இந்த எளிய 10 வினாடி சோதனை, உங்களுடைய ஆயிரக்கணக்கான ரூபாயையும், உயிரினும் மேலான பாதுகாப்பையும் உறுதி செய்யும்!

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
PulseNews சுருக்கம்

காரை நிறுத்திவிட்டுச் செல்லும்போது, சில முக்கியமான பொருட்களை உள்ளே மறந்தும் விட்டுச் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. நவீன காலத்தில் காரானது நமது இரண்டாவது வீடாக மாறிவிட்டாலும், அவசரத்தில் பொருட்களை உள்ளே விட்டுச் செல்வது பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

குறிப்பாக, காரின் உள்ளே எந்த காரணத்திற்காகவும் விட்டுச் செல்லக்கூடாத 5 வகையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். வெயில் காலங்களில் காரை பார்க் செய்வதற்கு முன் இத்தகைய பொருட்களை அகற்ற வேண்டியது பாதுகாப்பானது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu