“ஒரு பெண்ணை குறிவைத்து பேசுவது சரியல்ல...” - த்ரிஷாவுக்கு ஆதரவாக தெலுங்கில் எழுந்த குரல்!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் குடும்பத்தினருடன் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். இது மட்டுமில்லாது முதல்வர் விஜய் பதவியேற்கும் நாளிலும் கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து முதல்வர் விஜய்யுடன் பொதுவெளியிலும் பயணித்து வருகிறார். இவை அனைத்தும் விமர்சனத்துக்கு ஆளானது. அந்த வகையில் கடைசியாக கலந்து கொண்ட சுதந்திர தின விழாவும் விமர்சனம் ஆக அவர் எதுவும் வெளிப்படையாக இதுவரை விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் முதல்வர் விஜய் - த்ரிஷா குறித்தான விம்ரசனங்களுக்கு தெலுங்கு நடிகை சஞ்சனா கல்ராணி எதிர்வினையாற்றியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திடம் அவர் “உங்களுக்குத் தைரியம் இருந்தால், விஜய்யைப் பற்றி தொழில்முறை ரீதியாகப் பேசுங்கள். அவரது நிர்வாகத் திறனைப் பற்றிப் பேசுங்கள், ஏன் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறீர்கள்? இது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்படி ஒரு சூழல் மாறியிருக்கும் விதத்தை நாம் அதை இழிவாகவே பார்க்க வேண்டியுள்ளது. விமர்சனம் வைப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளில் குறை சொல்ல எதுவுமில்லாததால் இது போல் பேசுகின்றனர். ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் அவரை மதிப்பது மிக முக்கியம். த்ரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை, அவரும் சமமான மரியாதைக்குரியவர். எதுவாக இருந்தாலும், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் நண்பர்களாகவோ, கணவன் - மனைவியாகவோ அல்லது காதலன் - காதலியாகவோ இருக்கலாம், அவர்களின் தேர்வை வைத்து ஏன் அவர்களை விமர்சிக்கிறீர்கள்? ஒரு அரசியல்வாதியாக விஜய்யின் சாதனைகளைப் பற்றிப் பேசுங்கள், குறைகளைப் பற்றிப் பேசுங்கள். குறைகள் எதுவும் கிடைக்காததால் ஒரு பெண்ணை குறிவைத்து பேசுவது சரியல்ல” என்றுள்ளார். இவர் தமிழில் 2006ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அதிக படங்களில் நடித்த இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா மற்றும் முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா ஆகியவற்றில் நடிகை த்ரிஷா பங்கேற்றார். மேலும், அவர் முதல்வருடன் பொதுவெளியில் தொடர்ந்து பயணித்து வருவதால், இந்த நிகழ்வுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின.
இந்த விவகாரத்தில் த்ரிஷா இதுவரை எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிராக தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். ஒரு பெண்ணை மட்டும் குறிவைத்து பேசுவது சரியல்ல என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.