எறும்புகளுக்கு இப்படி ஒரு சிட்டியா? 26 அடி ஆழத்தில் நவீன நகரம்; 10 டன் சிமெண்ட் ஊற்றியதும் வெளிவந்த அதிசயம்
பிரேசிலின் பரந்த செர்ராடோ (Cerrado) பகுதியில் பேராசிரியர் லூயிஸ் கார்லோஸ் ஃபோர்டி மற்றும் அவரது குழுவினர் ஒரு அறிவியல் சாதனையைப் படைத்துள்ளனர். கைவிடப்பட்ட ஒரு மாபெரும் இலை வெட்டும் எறும்புகளின் (Leaf-cutter ant) புற்றில் அவர்கள் பத்து டன் சிமெண்ட்டை ஊற்றினர். அந்த கான்கிரீட் 26 அடி ஆழம் வரை பரவியிருந்த ஒரு சிக்கலான வலைப்பின்னல் பாதையை 10 நாட்களுக்கு பிறகு நிரப்பியது. திருடனுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம்... 1 வருடம் கழித்து கிடைத்த பணம்; விவசாயிக்கு நடந்த சோகம் நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அந்த எறும்புகள் ஒரு பிரம்மாண்டமான பாதாளக் கட்டமைப்பை உருவாக்கியது வெளிவந்துள்ளது. பல மில்லியன் எறும்புகள் வாழ்ந்த இந்த பரந்த கட்டமைப்பில், உணவு சேகரிக்கும் சுரங்கங்கள், பூஞ்சைத் தோட்டங்கள் மற்றும் காற்றோட்ட வசதிகள் என மிக நுணுக்கமான இட அமைப்பு இருந்துள்ளன. இந்த கட்டமைப்பை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், மனிதர்களின் சிவில் இன்ஜினியரிங் அதிசயங்களுக்கு இணையாக, ஒரு சிக்கலான நகர்ப்புற சூழலை உருவாக்க இந்த பூச்சிகள் சுமார் 40 டன் மண்ணை நகர்த்தியுள்ளதைக் கண்டறிந்தனர். நெடுஞ்சாலை போல அமைப்பு ஆராய்ச்சி முடிவுகளின்படி, 500 சதுர அடி பரப்பளவிலும் 26 அடி ஆழத்திலும் பரந்து விரிந்திருந்த ஒரு பிரம்மாண்ட எறும்புப் புற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதன் அமைப்பைக் கண்டறிய அவர்கள் சிமெண்ட்டை ஊற்றி ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு அறைக்கும் ஒரு தனிப்பட்ட நோக்கம் இருப்பது தெரிந்தது. தங்கள் முக்கிய உணவான பூஞ்சைகளை வளர்க்க நீள்வட்ட வடிவ பூஞ்சை அறைகளையும், கழிவுகளைச் சேகரிக்க கழிவு அறைகளையும் அந்த எறும்புகள் உருவாக்கியிருந்தன. அவற்றின் சுரங்கப்பாதைகள் ஏனோதானே என்று தோண்டப்படாமல், இலைகளை வேகமாக எடுத்துச் செல்லவும், ஆக்சிஜன் சீராகக் கிடைக்கவும் ஒரு நெடுஞ்சாலை போல அமைக்கப்பட்டிருந்தன. கூட்டு உழைப்பு சீனப் பெருஞ்சுவரைக் கட்ட மனிதர்கள் காட்டிய அதே கூட்டு உழைப்பை இந்த எறும்புகளும் காட்டியுள்ளன. சுமார் 40 டன் மண்ணை இவை தரைக்கு மேலே கொண்டு வந்துள்ளன. மண்ணின் தன்மையைப் புரிந்து கொண்டு மேலிருந்து வரும் அழுத்தத்தால் சுரங்கங்கள் இடிந்து விழாதவாறு மிகத் துல்லியமாக இவை கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ராணி எறும்பும் அதன் முட்டைகளும் அடிமட்டத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன. மேலும், இந்த புற்றுகள் இயற்கையான காற்றோட்ட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூஞ்சை அறைகளில் உருவாகும் வெப்பம், ஒரு புகைபோக்கி விளைவை (Chimney effect) உருவாக்கி மேலிருந்து புதிய காற்றை உள்ளே இழுக்கும் வகையில் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கிருமிகள் பரவாமல் இருக்க கழிவு அறைகள் ஓரங்களிலும், அடிப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. புற்றின் ஒவ்வொரு சிறிய பாதையையும் வரைபடமாக்க விஞ்ஞானிகள் சுமார் 10,000 கிலோ வரை சிமெண்ட் கலவையைப் பயன்படுத்தி இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர்.

பிரேசிலின் செர்ராடோ பகுதியில் பேராசிரியர் லூயிஸ் கார்லோஸ் ஃபோர்டி தலைமையிலான ஆய்வுக்குழுவினர், கைவிடப்பட்ட இலை வெட்டும் எறும்புகளின் புற்றில் 10 டன் சிமெண்ட்டை ஊற்றி ஆய்வு செய்தனர். பத்து நாட்களுக்குப் பிறகு இந்த கான்கிரீட் 26 அடி ஆழம் வரை பரவியிருந்த சிக்கலான பாதைகளை நிரப்பியதில், எறும்புகள் உருவாக்கிய பிரம்மாண்டமான பாதாள நகரம் வெளிச்சத்திற்கு வந்தது.
500 சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்த இந்த கட்டமைப்பை உருவாக்க எறும்புகள் சுமார் 40 டன் மண்ணைத் தோண்டி அகற்றியுள்ளன. இதில் உணவு சேகரிப்புப் பாதைகள், பூஞ்சை வளர்ப்பு அறைகள், கழிவு சேகரிப்புப் பகுதிகள் மற்றும் காற்றோட்ட வசதிகள் என அனைத்தும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுள்ளன. மனிதர்களின் சிவில் இன்ஜினியரிங் அறிவியலுக்கு இணையாக, நெடுஞ்சாலைகள் போன்ற சுரங்கப்பாதைகள் மற்றும் புகைபோக்கி விளைவு மூலம் காற்றோட்டத்தைப் பெறும் வகையில் இந்த அற்புதமான நகரை எறும்புகள் கூட்டு உழைப்பால் வடிவமைத்துள்ளன.