“மக்களே உஷார்!”.. தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்.. சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!!
Swine Flu Cases Surge in Tamil Nadu: தமிழகத்தில் H1N1 பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஜனவரியில் 19-ஆக இருந்த நிலையில் தற்போது 339-ஆக அதிர்ச்சிகரமாக உயர்ந்துள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் எச்1என்1 பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஜனவரி மாதம் 19 ஆக இருந்த நிலையில், தற்போது அது 339 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்பு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனை அலட்சியம் செய்ய வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாதிப்பு இருப்பவர்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.