PulseNews
தமிழகம்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 1.18 கோடி பறிமுதல்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் இன்று (ஆகஸ்ட் 27) லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் (DVAC) அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.28.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜிபே (GPay) மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.89.89 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன. இது குறித்து டி.வி.ஏ.சி (DVAC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் மற்றும் கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.1.18 கோடியாகும். சென்னையில், பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சமும், ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9,500-ம், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் ரூ.25,150-ம் பறிமுதல் செய்யப்பட்டன. கிண்டியில் உள்ள அரசின் தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.31.52 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான ஜிபே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. மற்ற முக்கிய கண்டுபிடிப்புகளில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.2.14 லட்சமும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.1.92 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஜிபே பரிவர்த்தனைகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.6.69 லட்சமும், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.5.45 லட்சமும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.3.80 லட்சமும் அடங்கும். திடீர் சோதனைகளில் கிடைத்த தகவல்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 1.18 கோடி பறிமுதல்
PulseNews சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 27) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஒருங்கிணைந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ரூ.28.24 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஜி-பே (GPay) செயலி வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.89.89 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu