PulseNews
தமிழகம்

தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றன. வரவிருக்கும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, தங்களது பல ஆண்டு கால கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கையாக முன்வைத்து இந்த மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் வாக்குறுதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நிலைப்பாடும்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தவெகவின் தேர்தல் அறிக்கையின் 93-வது வாக்குறுதியில், 5 ஆண்டுகளை நிறைவு செய்த தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றி 16 கல்வி ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளத்துடன் கூடிய பணி நிரந்தரத்தை முதல்வர் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் சமூக பின்னணி

பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் (Samagra Shiksha) உடற்கல்வி (3,843), ஓவியம் (3,721), கணினி அறிவியல் (2,033), தையல் (1,584), இசை (329), வாழ்க்கைக்கல்வி (192), கட்டடக்கலை (49) மற்றும் தோட்டக்கலை (22) ஆகிய 8 சிறப்புப் பாடங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

பணி நிரந்தரம் கிடைக்காத நிலையிலேயே சுமார் 5,000 ஆசிரியர் பணியிடங்கள் மரணம் மற்றும் பணி ஓய்வு காரணங்களால் காலியாகி, அந்த குடும்பங்கள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளன. தற்சமயம் பணியில் உள்ள 11,773 ஆசிரியர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும், ஆயிரம் பேருக்கு மேல் விரைவில் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண் ஆசிரியர்கள் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஏழை விவசாய தினக்கூலி குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் உள்ளனர்.

சமூக பாதுகாப்பு கோரிக்கையும் பணி நிரந்தர முன்உதாரணங்களும்

தற்போது மிகவும் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் இந்த ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணியின் போது இறக்க நேரிட்டால் நிவாரணம், பணி ஓய்வுக்கால பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் போனஸ் போன்ற அடிப்படை சமூக பாதுகாப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் இவர்களது குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், அனைவருக்கும்கல்வி திட்ட சிறப்பாசிரியர்கள், பகுதிநேர துப்புரவுப் பணியாளர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றிய மணியக்காரர், கிராமசை, தலையாரி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை எழுத்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்த பல முன்உதாரணங்கள் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கை மீதான எதிர்பார்ப்பு

மனிதாபிமான அடிப்படையில் இந்த வரலாற்று முன்உதாரணங்களையும், தேர்தல் வாக்குறுதியையும் கருத்தில் கொண்டு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், வரவிருக்கும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையிலேயே பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்ந்து மனுக்களை அனுப்பி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகத் தங்களுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், தற்போது வாய்ப்பு வழங்கிய தங்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, தங்களின் நீண்டகாலக் கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து அரசு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu