PulseNews
தமிழகம்

அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 1 பவுன் மோதிரம் திருட்டு..!

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகேயுள்ள கருக்குவிளை கிராமத்தை சேர்ந்தவர் மேரி.இவர், சுய உதவி குழு கடனை அடைப்பதற்காகவும் , பிள்ளையின் மருத்துவ செலவிற்காகவும் தன்னுடைய 1 சவரன் தங்க மோதிரத்தை அடகு வைத்து பணம் பெறுவதற்காக முளகுமூடு சென்றார். அரசு பேருந்தில் பயணித்த அவர், பேருந்தில் இருந்து இறங்கியபோது தங்க மோதிரம் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் பேருந்து புறப்பட்டு சென்று விட்டதால் ஆட்டோவில் ஏறி அந்த பேருந்தை தக்கலை பகுதியில் வைத்து மடக்கி பயணிகளிடம் சோதித்தார். அப்போதும் மோதிரம் கிடைக்கவில்லை. இதையடுத்து புகாரளிக்க தக்கலை காவல் நிலையம் சென்ற மேரி, என்ன செய்வதென்று தெரியாமல் விரக்தியில் கதறி அழுதார் .அவரை சமாதனப்படுத்தி போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 1 பவுன் மோதிரம் திருட்டு..!
PulseNews சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் கருக்குவிளை கிராமத்தைச் சேர்ந்த மேரி, தனது நகை மற்றும் பணத்தைக் கையாள்வதற்காக அரசு பேருந்தில் முளகுமூடு சென்றார். சுய உதவிக்குழு கடன் மற்றும் மருத்துவச் செலவிற்காக ஒரு பவுன் மோதிரத்தை அடகு வைக்க அவர் எடுத்துச் சென்றிருந்தார்.

பேருந்திலிருந்து இறங்கியபோது, மோதிரம் இருந்த பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பேருந்து அங்கிருந்து சென்றுவிட்டதால், ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று தக்கலை பகுதியில் வைத்து அந்தப் பேருந்தை அவர் வழிமறித்தார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu