ஐதராபாத்தில் வீட்டில் திருடிய நபர், போதையில் தூங்கியதால் சிக்கிக்கொண்டார்..!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்ற பாரூக்கான் என்ற நபர், பீரோவை திறந்து ரொக்கம், நகைகளை திருடிய பின்னர் போதையில் அங்கேயே தூங்கியதால் சிக்கிக்கொண்டார். குறட்டை சத்தம் கேட்டு விழித்தெழுந்த வீட்டின் உரிமையாளர், அலமாரி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே அறையில் ஒரு நபர் எந்தவித அச்சமும் இன்றி நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்கிகொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்ட உரிமையாளர், திருடனை எழுப்பி விசாரித்தார். திருடுவதற்காக வந்தேன்.. போதையில் தூங்கி விட்டதால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடியதால் பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு திருடனை உரிமையாளர் அனுப்பிவிட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பாலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த பாரூக்கான் என்ற நபர், அங்கிருந்த பீரோவைத் திறந்து பணம் மற்றும் நகைகளைத் திருடினார். திருட்டு வேலையை முடித்த கையோடு, போதையின் காரணமாக அந்த அறையிலேயே அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.
வீட்டின் உரிமையாளர் குறட்டை சத்தம் கேட்டு விழித்தெழுந்தபோது, பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதே அறையில் திருடன் பயமின்றி குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு வீடியோ எடுத்த அவர், திருடனை எழுப்பி விசாரணை மேற்கொண்டார்.