PulseNews
தமிழகம்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி

கரூர் கூட்ட நெரிசல் என்பது ஒரு துயர சம்பவம் அதில் அரசியல் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய்ள்ளது.

கரூர் அரசு பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி

கடந்த ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அரசுப்பணி வழங்கினார். இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கில், அரசுப்பணிகளை கருணை அடிப்படையில் இப்படி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்:

நீதிபதிகள் பரித்வாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிவாரணமாக வேலையை அரசு வழங்க விரும்பினால், அதில் உயர்நீதிமன்றத்திற்கு என்ன பிரச்னை? வேலைவாய்ப்பு பிரச்சினை என குறிப்பிட்டு இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் வாதிட்டார். எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசுக்கு இதுபோன்று வேலைகளை வழங்கும் அதிகாரம் இருக்க முடியாது” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பினர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டதோடு, பணி நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

உங்களுக்கு என்னங்க பிரச்னை?

வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன பிரச்சினை? கூட்ட நெரிசல் ஏற்பட்டது, மக்கள் இறந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும், பண இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு முடிவு செய்தால், அவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்? அந்தத் துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே உறுப்பினர் இறந்துவிட்டால், அரசு அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஏதேனும் வேலை கொடுக்க வேண்டாமா?" என நீதிபதிகள் வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், ”கூட்ட நெரிசலுக்குக் காரணமான கட்சியே தற்போது மாநிலத்தை ஆட்சி செய்வதால், இந்த முடிவில் நலன் முரண்பாடு உள்ளது” என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் யாருக்காக ஆஜராகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என்று பதிலளிக்க, "இங்கே அரசியலைக் கொண்டு வராதீர்கள்," என்று நீதிபதி சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
PulseNews சுருக்கம்

கடந்த ஆண்டு கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேரின் குடும்பத்தினருக்கு, கடந்த மாதம் விஜய் அரசுப் பணி வழங்கியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது ஒரு துயரமான நிகழ்வு என்பதால் இதில் அரசியல் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu