கனடாவில் மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!
கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல் துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்று (16/08/2026) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றது. இதில் ஆறுமுகம் சபைஸ்வரன் அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுரைகள் ...

கனடாவில் காலமான முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு, வடமராட்சியில் நினைவேந்தல் நிகழ்வு இன்று (16/08/2026) காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல் துஷ்யந்தன் தலைமை தாங்கினார்.
மைக்கல் நேசக்கரம் மற்றும் மைக்கல் விளையாட்டு கழகம் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஆறுமுகம் சபேஸ்வரனின் திருவுருவப் படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடர்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது; தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.