Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி

Novak Djokovic: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 39 வயதான நோவக் ஜோகோவிச், 25 வயதான மரியானோ நவோனே வீழ்த்தினார்.

ஆடுகளத்திலேயே அழுத ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரரான நோவோக் ஜோகோவிச் தோல்வி கண்டு வெளியேறினார். இதனை ஏற்க முடியாமல் ஆடுகளத்திலேயே அவர் மனமுடைந்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வென்று வரலாற்று சாதனையாக 25வது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு பேரதிர்ச்சி தந்துள்ளார். இரவு முழுவதும் உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடிய வந்த நிலையில், கடுமையாக முயன்ற பிறகும் 6-7, 7-5, 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனேவிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்த, செரியாவின் ஜோகோவிச் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

போட்டியின் போதே வாந்தி, அழற்சி

ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் தொடக்கத்தின் போதே ஜோகோவிச் உடலளவில் பலவீனமாக இருப்பதை தெளிவாக காண முடிந்தது. மோசமான வானிலை காரணமாக கூரை மூடப்படுவதற்கு முன்பு, 39 வயதான அவர் தனது தலையில் மீண்டும் மீண்டும் பனிக்கட்டிப் பையைப் பயன்படுத்தினார். ஈரப்பதமான சூழல் அசௌகரியமாக தோன்றியுள்ளது. கூரை மூடப்பட்டவுடன் ஏசியை இயக்க முடியுமா என்று மேற்பார்வையாளரிடம் கேட்டார். மூன்றாவது செட்டின் ஆறாவது ஆட்டத்தின்போது ஜோகோவிச் பலமுறை வாந்தி எடுத்ததால், உடல் நல குறைபாடு தீவிரமடைந்தது. ஆட்டத்தைத் தொடர்வதற்கு முன்பு அவர் ஆடுகளத்தின் பின்புறம் சோர்வாக காணப்பட்டார். ஆட்டம் நான்காவது மணி நேரத்தை நெருங்கியபோது, போட்டித் தொடரின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு மாத்திரைகளை வழங்கினர்.

Novak Djokovic looks very emotional down 1-3 in the 5th set against Navone at the US Open.

Definitely in pain physically, but these also look like emotional tears.

4+ hours at 39 years old.

The New York crowd is trying to give him a push for another heroic comeback.

🥹 pic.twitter.com/QsZqF0Z04o
— The Tennis Letter (@TheTennisLetter) August 31, 2026

கடுமையாக போராடிய ஜோகோவிச்

மோசமான உடல்நிலைக்கு மத்தியில் டைபிரேக்கில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், கடுமையாகப் போராடி இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இதையடுத்து கடுமையாக போராடிய அர்ஜென்டினா வீரர் நான்காவது செட்டில் மீண்டும் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, அதை 6-2 என்ற கணக்கில் வென்றார். பின்னர் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, ஜோகோவிச்சை போட்டியில் நீடிப்பதற்காக ஒரு கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள வைத்தார். இதனால் மிகவும் சோர்வான நிலையை எட்ட, ஆட்டம் தன் கையை விட்டு நழுவிச் செல்வதைக் உணர்ந்த ஜோகோவிச், கண்கூடாக வேதனையுடன் ஆடுகளத்தில் அழத் தொடங்கினார். இறுதியில் ஐந்தாவது செட்டை 6-1 என்ற கணக்கில் வென்று, தனது விளையாட்டு பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை மரியானோ நவோனே பதிவு செய்தார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி

ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 78 முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றில் அவர் தோல்வி கண்டுள்ளார். முன்னதாக கடந்த 2006 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பால் கோல்ட்ஸ்டீனுக்கு எதிராக முதல் சுற்றிலேயே அவர் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:iPhone 18 Pro Max: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் வெளியீட்டு தேதி - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி? புதுசா ஒரு சிப்?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறினார். 25 வயதான மரியானோ நவோன் என்பவரிடம் தோல்வியுற்ற ஜோகோவிச், களத்திலேயே மனமுடைந்து அழுதது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் வெற்றி பெற்று, தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய அவருக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன்போது அவர் கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.