" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

" கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை "

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் கல்லூரிக்கு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் இருந்ததால் , இருக்கை கிடைக்காமல் பேருந்தின் படிக்கட்டு பகுதியில் நின்றபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் , மாணவிக்கு உதவுவது போல் நடந்து கொண்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது கல்லூரி அமைந்துள்ள ஈச்சனாரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் , உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

" காவல் ஆய்வாளரின் ஓட்டுனர் "

புகாரை பெற்ற மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பேருந்தில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்துதல் , சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையின் போது , மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து , காவலர் மணிவேந்தன் மீது பொருந்தும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் , அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , சம்பவம் குறித்து காவல்துறை நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஈச்சனாரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த நபர் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றும் மணிவேந்தன் என்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.