PulseNews
தமிழகம்

நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தில் வெள்ளம் பாய்ந்ததில் 7 பேர் பலி..!

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டு இடிபாடுகளுடன் வெள்ளம் பாய்ந்ததில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். சமோலி மாவட்டம், பிப்பல்கோட்டியில் நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் திட்டப் பணிக்காக மலையை குடைந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது கனமழையால் அருகே உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சகதியுடன் சுரங்கத்தில் வெள்ளம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் கிடைத்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தில் வெள்ளம் பாய்ந்ததில் 7 பேர் பலி..!
PulseNews சுருக்கம்

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிப்பல்கோட்டியில், நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையைக் குடைந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணியின்போது, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்திற்குள் வெள்ளம் மற்றும் சகதி புகுந்தது.

சுரங்கத்தின் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த துயரச் சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu