தேங்காய் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் டயர் வெடித்து விபத்து..!
கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியின் டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த தேங்காய்கள் சாலை முழுவதும் சிதறியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் சாலையில் கிடந்த தேங்காய்களை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

கோவையில் உக்கடத்திலிருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்றின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது லாரியில் இருந்த தேங்காய்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் சாலையில் இருந்த தேங்காய்களை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.