PulseNews
தமிழகம்

இனி எச்சில் துப்பினாலும், குப்பை வீசினாலும் ரூ.1,000 அபராதம்: ரயில்வே நிர்வாகம் அதிரடி

இந்திய ரெயில்வேயை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் நோக்கில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் கண்ட இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கும், எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், பயணிகள் பலர் தொடர்ந்து பொது இடங்களில் கழிவுகளையும் குப்பைகளையும் வீசி வந்ததால், தூய்மையைப் பராமரிப்பதில் ரெயில்வே நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குப்பை போடுபவர்களுக்கான அபராதத் தொகை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு, ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த அபராதத் தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடி அமலுக்கு வந்துள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இனி எச்சில் துப்பினாலும், குப்பை வீசினாலும் ரூ.1,000 அபராதம்: ரயில்வே நிர்வாகம் அதிரடி
PulseNews சுருக்கம்

இந்திய ரயில்வே வளாகங்கள் மற்றும் பெட்டிகளில் தூய்மையைப் பராமரிக்க ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு முதல் எச்சில் துப்புபவர்களுக்கும், குப்பை வீசுபவர்களுக்கும் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது பொது இடங்களில் தொடர்ந்து குப்பை வீசப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த அபராதத் தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu