பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு: 12,346 மாணவர்கள் வெளியேறினர்!
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வு செய்தி: 3-ம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 பேரில் 12,346 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் கலந்தாய்வில் இருந்து வெளியேறினர்; 56,294 பேருக்கு மட்டுமே பி.இ., பி.டெக். இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. Anna University engineering counselling: Out of 68,640 students with provisional allotment in round 3, 12,346 exited without confirming seats, leaving 56,294 with final BE, BTech allotments across 418 colleges.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வின் மூன்றாவது சுற்றில், தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 மாணவர்களில் 12,346 பேர் இறுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக, மொத்தம் 418 பொறியியல் கல்லூரிகளில் 56,294 மாணவர்களுக்கு மட்டுமே பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.