ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்: பிரபல ரவுடி கைது
சென்னை கஞ்சா கடத்தல் கைது: ஆந்திராவிலிருந்து ரெயிலில் 4 கிலோ கஞ்சா கொண்டு வந்த மதுரை பிரபல ரவுடி வெள்ளைக்காளி கூட்டாளி கார்த்திக் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். Notorious Madurai rowdy Vellaikkali’s aide Karthik held at Perambur station with 4 kg ganja smuggled by train from Andhra, police probe wider network.

ஆந்திராவிலிருந்து ரயிலில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த கார்த்திக் என்பவரை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கார்த்திக், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளைக்காளியின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.