யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார். இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை வி...

யாழ்ப்பாணம் குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று, இன்று (16.08.2026) மாலை நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10 பேரும் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விரிவான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நேரிட்டதற்கான காரணங்களை கண்டறியும் வகையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.