‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழா!
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை One Step Entertainment சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘லியோ’ உள்ளிட்ட [...] The post ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழா! appeared first on Iruthi theerppu : Tamil Investigative Magazine | Latest tamil news | 24/7 News | Breaking News | Live News .

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.
மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார். துஷ்யந்த் ஏற்கனவே ‘நிறங்கள் மூன்று’ மற்றும் ‘தருணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.