PulseNews
தமிழகம்

அடுத்தடுத்து சாய்ந்த மின் கம்பங்கள்: கோவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே பிரதான சாலையில், அடுத்தடுத்து 6 சிமெண்ட் மின் கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோவை - திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று இன்று எதிர்பாராதவிதமாகத் திடீரென முறிந்தது. அந்தக் கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளின் பாரம் தாங்காமல், அதைத் தொடர்ந்து இருந்த அடுத்தடுத்த 6 மின் கம்பங்களும் சங்கிலித் தொடர் போலச் சரசரவெனச் சாலையில் சரிந்து விழுந்தன. மின் கம்பங்கள் விழுந்த அந்த வினாடியில், அதிர்ஷ்டவசமாகப் பாதசாரிகளோ வாகனங்களோ அருகில் செல்லாததால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள், முறிந்து விழுந்த கம்பங்களை அகற்றிப் புதிய மின் கம்பங்களைப் பொறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அடுத்தடுத்து சாய்ந்த மின் கம்பங்கள்: கோவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
PulseNews சுருக்கம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில், வரிசையாக 6 சிமெண்ட் மின் கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை - திருச்சி சாலையில், சாலையோரம் இருந்த ஒரு மின் கம்பம் திடீரென முறிந்ததால் விபத்து நேரிட்டது.

முறிந்த கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளின் பாரம் தாங்காமல், அதனைத் தொடர்ந்து இருந்த மற்ற மின் கம்பங்களும் அடுத்தடுத்து கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu