ஒரே புகைப்படம்; மெட்ரோ ரயிலில் பூனைக்கு தலைமைப் பொறுப்பு
மராட்டிய மாநிலம், மும்பை நகரின் 7 வது வழித்தடமான குண்டவாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாதக்கணக்காகச் சுற்றித்திரியும் பூனைக்கு சிஎப்ஓ என்ற பதவியை மும்பை மெட்ரோ நிர்வாகம் வழங்கி உள்ளது. குண்டவாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் பல மாதங்களாக வாழ்ந்து வரும் அந்த பூனை, பலருக்கும் மன அமைதியைத் தரும் ஒரு பழக்கமான முகமாக மாறியுள்ளது. இந்த பூனையின் அமைதி மற்றும் அழகான தோற்றத்தின் காரணமாக, அந்த பூனையைப் பலரும் ரசிப்பதுடன், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் சந்தேஷ் சாமந்த் என்பவர் இந்த பூனையைப் படம் பிடித்தார். அந்த படத்தை, “சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ஊதியம் பெறாத இந்த காவலருக்கு அதிகாரிகள் ஒரு அதிகாரப்பூர்வ பதவியை வழங்க வேண்டும். அது தற்போது இலவசமாகப் பணியாற்றி வருகிறது” என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மும்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இதுதான் எங்கள் தலைமைப் பூனை அதிகாரி (சிஎப்ஓ). நிலைய ஆய்வுகள், பயணிகளைக் கண்காணித்தல் மற்றும் அனைவரும் ரசிக்கும்படியான சரியான இடத்தில் அமர்ந்திருப்பது ஆகியவை அதன் பொறுப்புகளில் அடங்கும். இதுவரை, அதன் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது” என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மும்பை மெட்ரோவின் 7-வது வழித்தடத்தில் உள்ள குண்டவாலி ரயில் நிலையத்தில் பல மாதங்களாக சுற்றித்திரியும் பூனைக்கு, அந்நிர்வாகம் சிஎப்ஓ (CFO) என்ற பதவியை வழங்கியுள்ளது. இந்த பூனை நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு மன அமைதியை அளிக்கும் ஒரு பழக்கமான முகமாக மாறியுள்ளது.
அதன் அழகான தோற்றம் மற்றும் அமைதியான குணத்தால் ஈர்க்கப்பட்ட பயணிகள், அந்த பூனையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.