அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’
சிவகார்த்திகேயன், தற்போது 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். 'தாய்க் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' மற்றும் 'டர்மரிக் மீடியா' நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டியும் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு முன்னோட்டம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விருமாண்டி சாமியாடியாக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். இதனால் முருகனுக்கு எதிரான படமா என இயக்குநரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இரண்டு தெய்வங்களையும் வழிபடுகிற கதையாக இருக்குமெனவும் யாருக்கும் எதிரான படமாக இது இருக்காது எனவும் விளக்கமளித்திருந்தார். பின்பு மே மாதம் மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்தது. இது கடந்த ஜூனில் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட சிறு வீடியோவில் மலைகளுக்கு நடுவில் முறுக்கு மூசையுடன் நிற்கிறார். இந்த படப்பிடிப்பில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. 'தாய்க் கிழவி' படப்புகழ் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க, பால சரவணன், அருள்தாஸ் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.