PulseNews
தமிழகம்

Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு எனப்படும் சிலம்பரசன். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.

அரசன்:

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணியில் இதற்காக பிரம்மாண்டமாக படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. முழுமூச்சில் எவ்விதத் தொய்வும் இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

அனிருத் - சிம்பு - வெற்றி சந்திப்பு:

மிகவும் விறுப்பாக ஷுட்டிங் நடந்து வரும் சூழலில், படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவரும் சந்தித்து படத்தின் பணிகள் குறித்து படப்பிடிப்பு தளத்திலே ஆலோசனை நடத்தினர். இயக்குனர் வெற்றிமாறன் முதன்முறையாக அனிருத்துடன் இசைக்கூட்டணியில் இணைந்துள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படத்திற்கும், இந்த படத்திற்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே படக்குழு உறுதி செய்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான அந்த படத்தில் இடம்பிடித்த சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

சூடுபிடிக்கும் ஷுட்டிங்:

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், படத்தின் அப்டேட் இனி தொடர்ச்சியாக வெளியாகும் என்று கருதப்படுகிறது. படப்பிடிப்பு எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், ‘அரசன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வடசென்னையைப் போன்றே ரவுடிச கதைக்களத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் இதுவரை பார்த்திராத சிம்புவை ரசிகர்கள் பார்க்கலாம் என்று படக்குழு கருதுகிறது.

தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் முதன்முதலில் நடிப்பதற்கு சிம்புவைத்தான் அணுக வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது நடக்காமல் போனது. ஆனாலும், அந்த படத்தின் யுனிவர்சலில் அரசன் படத்தை சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்குகிறார். இதனால், சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இருக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!
PulseNews சுருக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிக வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இதற்காக சென்னை தரமணியில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பணிகளில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu