PulseNews
தமிழகம்

மேகதாது திட்டம்: 5 டிஎம்சி போக மீதி நீர் தமிழகத்திற்கே செல்லும் – டி.கே.சிவக்குமார் உறுதி

உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில், 31-வது தென்மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, கேரள முதல்வர் சதீசன், புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் தென்மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், நதிநீர் விவகாரங்கள் குறித்துப் பேசும்போது, தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர, பிரித்துவிட கூடாது. நதிநீர் பங்கீடு என்ற நிலையிலிருந்து 'நதிநீர் ஒத்துழைப்பு' என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு என்ற அடிப்படையிலே நதிநீர் பிரச்னைகளை நாம் அணுக வேண்டும். ஆறுகளுக்கு எந்தவித அரசியல் எல்லையும் தெரியாது; கர்நாடகா எப்போதுமே பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்தே செயல்படுகிறது. அதே நேரத்தில், கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும் மதிக்க வேண்டும். நாங்க இங்கு புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாகவே வந்துள்ளோம். எங்களுக்கு தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பே கர்நாடகாவின் முக்கிய கொள்கைகள்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மேகதாது அணை திட்டம் குறித்துப் பேசிய அவர், மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் மிகவும் முக்கியமான திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு உதவும். உண்மையில் மேகதாது அணை கர்நாடகாவுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்காகவே கட்டப்படுகிறது. இதனால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்குத் தான் அதிக பலன் கிடைக்கும். பெங்களூரு மக்களின் தாகம் தீர்க்க, அந்நகரத்தின் குடிநீர் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு மேகதாது அணை கட்டப்படுகிறது. பெங்களூரு நகரின் குடிநீருக்காக இந்த அணையில் இருந்து வெறும் 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும். குடிநீருக்கான 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர மற்ற அனைத்து நீரும் முறைப்படி தமிழ்நாட்டிற்கே சென்றடையும் என்று தெரிவித்தார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மேகதாது திட்டம்: 5 டிஎம்சி போக மீதி நீர் தமிழகத்திற்கே செல்லும் – டி.கே.சிவக்குமார் உறுதி
PulseNews சுருக்கம்

சென்னை மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்து கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக மேகதாது திட்டம் குறித்து பேசிய டி.கே.சிவக்குமார், அந்தத் திட்டத்தில் 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர மீதமுள்ள நீர் தமிழகத்திற்கே செல்லும் என்று உறுதி அளித்துள்ளார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, கேரள முதல்வர் சதீசன் மற்றும் புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu