அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது
அமெரிக்காவில் காதலியை கொன்று தப்பிய இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது: அரிசோனாவில் 19 வயது காதலியை கழுத்து நெரித்து கொன்ற 20 வயது இந்திய மாணவர் வருண் பட்சிகரி, ஜெர்மனி வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டார். US Arizona murder case: Indian student Varun Batsigari arrested in Germany after allegedly strangling his 19-year-old girlfriend Julissa in Tucson and attempting to flee to India via Germany.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தனது 19 வயது காதலியான ஜுலிசாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, வருண் பட்சிகரி என்ற 20 வயது இந்திய மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலையைச் செய்த பிறகு இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற வருண், ஜெர்மனி விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.