ராணி மேரி கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
சென்னை ராணி மேரி கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சைபர் குற்றங்களுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவிகள் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சைபர் குற்றங்களால் இந்தியா முழுவதும் சுமார் ரூ.23 ஆயிரம் கோடியும், ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மாநகரில் சுமார் ரூ.315 கோடியும் பண மோசடி நடைபெற்றுள்ளதாக சைபர் கிரைம் துணை ஆணையர் கே.எஸ். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, இணைய வழி குற்றங்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நாடு முழுவதும் சைபர் குற்றங்களால் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மாநகரில் மட்டும் சுமார் 315 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.