விடை பெறும் சட்டசபை, தலைமை செயலகம்.. முடிவுக்கு வரும் புனித ஜார்ஜ் கோட்டை.. முதல்வர் அறிவிக்கிறார்
Oneindia Tamil42 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →புனித ஜார்ஜ் கோட்டையில் தற்பொழுது இயங்கி வரும் சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டசபையில் அவர் வெளியிட உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பானது சட்டசபையில் எந்தவித விவாதமும் இன்றி நேரடியாக அறிவிக்க வகை செய்யும் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
#tamilnadu