“ஊழல் ஃபைல்கள் எங்கே?”.. 10 மணிக்கே சட்டமன்றம் போய்விட்டேன்.. முதல்வர் வாயே திறக்கல.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்!!
Udhayanidhi Slams CM Vijay: சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் ஊழல் ஃபைல்களைப் பற்றி சட்டமன்றத்தில் வாயே திறக்கவில்லை எனச் சாடியுள்ளார். மேலும், திமுக மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைக்க முடியும் என்றும், தற்போதைய அமைச்சர்கள் பட்டப்பெயர்களால் மட்டுமே பிரபலமாகி வருகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஊழல் தொடர்பான கோப்புகள் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை என்றும், தான் காலை 10 மணிக்கே சட்டமன்றத்திற்குச் சென்றும் அவர் இது குறித்து பேசவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை மட்டுமே வைக்க முடியும் என்று கூறிய உதயநிதி, தற்போதைய அமைச்சர்கள் தங்கள் செயல்பாடுகளுக்காக அல்லாமல், வெறும் பட்டப்பெயர்களால் மட்டுமே பிரபலமடைந்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.