PulseNews
தமிழகம்

குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் பலத்த கெடுபிடிகளுடன் நடந்து முடிந்ததாக தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்திய அளவில் மத்திய அரசுன் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்க் குரல்கள் எழுந்த நிலையில், சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேர்வு எப்போது?

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு (Civil Service Main Examination) 21.08.2026, 23.08.2026, 29.08.2026 மற்றும் 30.08.2026 -ல் நடைபெற்றது. இத்தேர்வுகள் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 02.30 முதல் 05.30 மணி வரையிலும் நடைபெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. இத்தேர்விற்கு சென்னை மாவட்டத்தில் மட்டும் 03 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 651 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 642 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்துள்ளனர். 09 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை. இத்தேர்வில் 13 மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

கண்காணிப்புப் பணி

இத்தேர்விற்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ஓர் கண்காணிப்பு அலுவலரும், மாநில அரசின் இந்திய ஆட்சிப்பணி நிலையில் ஒரு உயர் அலுவலரும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Face Authentication App மூலம் தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும். வருகைபுரிந்த தேர்வர்களின் தேர்வெழுத புகைப்படத்தினையும் ஒப்பு நோக்கி வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

எந்தப் புகாரும் இல்லை

மேற்காண் தேர்வு சார்ந்து எவ்வித புகாரும் இதுவரை பெறப்படவில்லை என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாட்டின் உயரிய பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!
PulseNews சுருக்கம்

மத்திய அரசு நடத்தும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளதாகத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வினை நடத்தியுள்ளது. பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்தத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu