PulseNews
தமிழகம்

மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!

பட்டியலின சமூக பெண்கள் அனைவரும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வேண்டும்; ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது - மதுரை கிளை

திருவிளக்கு பூஜை

மதுரை மேலூர் அருகே உள்ள செங்கரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி தாக்கல் செய்த மனு...," எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்மச்சி அம்மன் மற்றும் மாண்டு அய்யனார் கோயில்களில், சமூக பிரச்சினை காரணமாக சுமார் 40 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்புடன் வருகின்ற ஆக.14 ம் தேதி நடைபெறவுள்ள திருவிளக்கு பூஜைக்கு, காவல்துறையினர் பாதுகாப்புடன் உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

பூஜையை அமைதியாக நடத்தலாம்

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில்,

"கிராமத்தில் நிலவும் சமூக ரீதியான பதற்றமான சூழல் காரணமாக, கோயிலில் பூஜை நடத்த அனுமதித்தால் சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகலாம்" என தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தரப்பில், கடந்த சுமார் 40 ஆண்டுகளாக கோயில் திருவிழாவோ அல்லது பொதுமக்கள் சார்பிலான பூஜையோ நடைபெறவில்லை. கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சமூக உணர்வுப்பூர்வமான சூழல் குறித்து காவல்துறையினருக்கு அச்சம் இருக்கிறது". அதேசமயம், நீதிமன்றம் பூஜைக்கு அனுமதி வழங்கினால், அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து, கோயிலின் Fit Person மேற்பார்வையில் பூஜையை அமைதியாக நடத்தலாம், என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி உத்தரவில்...," குறிப்பாக பட்டியலின சமூக பெண்கள் எந்த காரணத்திற்காகவும் பங்கேற்பதில் இருந்து விலக்கப்படக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் நிகழ்ச்சியாக பூஜையை நடத்தக் கூடாது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜை தொடர்பான நிகழ்வுகள் நடைபெற வேண்டும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை நடத்த வேண்டும். என நீதிமன்றம் கால அட்டவணை நிர்ணயித்துள்ளது. “திருவிளக்கு பூஜைக்காக 6 பெண்கள் கொண்ட தனி பூஜைக் குழுவை அமைந்துள்ளது. மேலும், பூஜை அமைதியாக நடைபெற காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. மேலும், பூஜை விவரங்கள் அடங்கிய ஒரே ஒரு பேனர் மட்டும் வைக்கலாம். அந்த பேனர் தனிநபர் பெயரிலோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் பெயரிலோ இருக்கக் கூடாது. என உத்தரவில் கூறியிருந்தார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
PulseNews சுருக்கம்

மதுரை மேலூர் அருகே உள்ள செங்கரம்பட்டி கிராமத்தில், சமூகப் பிரச்சினை காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக ஸ்ரீ அம்மச்சி அம்மன் மற்றும் மாண்டு அய்யனார் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. இது தொடர்பாகச் செல்வராணி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீண்ட காலத்திற்குப் பிறகு கோயில்களில் பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இத்திருவிளக்கு பூஜையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழிபாட்டு நிகழ்வின்போது எவ்விதமான பிளெக்ஸ் பேனர்களும் வைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu