இராணுவ முகாம்கள் - விகாரைகளுக்குள் புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்! ரவிகரன் எம்.பி சந்தேகம்
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். செம்மணியில் நேற்று (17-08-2026) நீதியின் ஓலம் - 02 இறுதி நாள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இதில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் எவ்வித நிலத் தொடர்பும் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
செம்மணியில் நடைபெற்ற 'நீதியின் ஓலம் - 02' என்ற இறுதி நாள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தச் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.