பல்கலை மாணவர்களுக்காக மகாபொல நிதியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
மகாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு புதிய தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாபொல நிதியத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான விஜித் மலகொட இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த அமைப்பு மகாபொல உதவித்தொகை நிதி விநியோகம் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மகாபொல இணையத்தளம் மூலம் கிடைக்கும் இந்த புதிய அமைப்பு, இந்த மாதம் முதல் a...

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மகாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் புதிய தகவல் அமைப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் உதவித்தொகை விநியோகம் தொடர்பான தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று மகாபொல நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான விஜித் மலகொட தெரிவித்துள்ளார்.
மகாபொல இணையத்தளத்தின் ஊடாக இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். குறித்த இந்த புதிய தகவல் கட்டமைப்பு இந்த மாதம் முதல் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.