PulseNews
தமிழகம்

புதுச்சேரியில் மருத்துவர் தம்பதி வீட்டு கொள்ளை சம்பவத்தில் மூவர் கைது..!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் வசிக்கும் மருத்துவ பேராசிரியர் வினோத் நவில்சன் என்பவரது வீட்டில்,50 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற நபர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஜூலை 26ம் தேதி நடந்த சம்பவத்தில், போலீசார் தனிப்படை அமைத்து , கொள்ளை நடந்த வீட்டில் உள்ள தடயங்களை சேகரித்து, அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதே போன்று திண்டிவனம், ஆரணி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் காமராஜர் நகரில் கழுத்தில் ஆபரணம் அணிந்தபடி சென்றவரை போலீசார் தடுத்து விசாரித்தபோது மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 30 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாயையும் கைப்பற்றினர்.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதுச்சேரியில் மருத்துவர் தம்பதி வீட்டு கொள்ளை சம்பவத்தில் மூவர் கைது..!
PulseNews சுருக்கம்

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் வசிக்கும் மருத்துவ பேராசிரியர் வினோத் நவில்சன் வீட்டில், கடந்த ஜூலை 26-ம் தேதி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் திண்டிவனம், ஆரணி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உள்ள சுமார் 1000 சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் உட்பட மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu