PulseNews
தமிழகம்

மசாஜ் செண்டரில் பிரபல நடிகைக்கு நேர்ந்த சோக நிகழ்வு!

தமிழில் 1982ஆம் ஆண்டு வெளியான ‘மணல் கயிறு’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. பின்பு குழந்தை நட்சத்திரமாக ‘மண்ணுக்குள் வைரம்’, ‘நாயகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்பு நாயகியாக உருவெடுத்து ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செண்பக தோட்டம்’, ‘மறுபடியும்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவைத் தாண்டி சீரியல்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் வெகுவாக நடிப்பைதை குறைத்து கொண்டு தற்போது ஓரிரு படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மசாஜ் செண்டருக்கு போன போது தனது தாலியை தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் ரிலாக்ஸாகலாம் என சென்னை தி.நகரில் இருக்கும் ஒரு ஸ்பாவிற்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு ஊழியர் கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும், தாலியை கழட்டுங்கள் எனச் சொன்னார். உடனே கழட்டிக் கொடுத்தேன் உடனே அவர் ஒரு டப்பாவில் செயினை போட்டார். பின்பு மசாஜ் முடிந்து அந்த ரிலாக்ஸான மூடிலே நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் கணவர் வீட்டில் ஒரு மரணம் என்பதால் அதில் இருந்தேன். அடுத்த நாள் தாலி செயின் இல்லாமல் இருப்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட ஸ்பா நிர்வாகத்திற்கு ஃபோன் போட்டேன். அவர்கள் செயினை தற்போது காணவில்லை எனச் சொன்னார்கள். ஏற்கனவே சோகமாக இருப்பதால் தான் ஸ்பாவிற்கு சென்றேன், ஆனால் அங்கு அதை விட சோகமாக நடந்துவிட்டது. இது சம்பந்தமாக போலிஸில் புகார் கொடுத்திருக்கிறேன். தாலி செயின் நல்லபடியாக கிடைத்துவிடும் என நம்புகிறேன். இனிமேல் ஸ்பாவிற்கு செல்பவர்கள் ஊழியர்களை நம்பி எந்த ஒரு விலைமிக்க பொருட்களை கொண்டு செல்லாதீர்கள்” என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மசாஜ் செண்டரில் பிரபல நடிகைக்கு நேர்ந்த சோக நிகழ்வு!
PulseNews சுருக்கம்

1982-ம் ஆண்டு 'மணல் கயிறு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. தொடர்ந்து மண்ணுக்குள் வைரம், நாயகன் போன்ற படங்களில் நடித்த இவர், பின்னர் வண்ண வண்ண பூக்கள் மற்றும் மறுபடியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் வலம் வந்தார். தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ள வினோதினி, சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.

சினிமா மற்றும் சீரியல்களில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மசாஜ் செண்டர் ஒன்றில் நடிகை வினோதினிக்கு எதிர்பாராத சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu