“ரசிகர்களின் அன்பு... பாடலுக்கு வரும் கமெண்ட்ஸ்...” - யுவன் ஷங்கர் ராஜா பகிர்வு!
இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் செந்தில், ராதிகா, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “பியார் பிரேமா காதல் படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம். இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இந்தப் படம் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது” என்றார்.

இயக்குநர் இளன் இயக்கி முதன்முறையாக நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. செந்தில், ராதிகா மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் காட்டும் அன்பு மற்றும் அவர்கள் பதிவிடும் கருத்துகள் குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.