இலங்கைக் கடவுச்சீட்டினால் சிக்கல்: பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் முன்னாள் எம்.பி!
இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (07-08-2026) உயைாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை இயந்திரங்களால் சரியாக வாசிக்க முடியாததால், அது போலியானது எனச் சந்தேகித்து பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிக...

இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் அவற்றிலுள்ள குறைபாடுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (07-08-2026) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
கடவுச்சீட்டில் உள்ள தரக் குறைபாடுகளால் அவற்றை இயந்திரங்கள் மூலம் சரியாக வாசிக்க முடியவில்லை என்றும், இதனால் அக் கடவுச்சீட்டு போலியானது எனச் சந்தேகமடைந்தே பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் குறித்த முன்னாள் எம்.பியை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.