அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை : ரூ.1.18 கோடி பறிமுதல்!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (27.08.2026) அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 38 அரசு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ரொக்கமாக மட்டும் 28 லட்சத்து 24 ஆயிரத்து 945 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாகவும் லஞ்சம் கைமாற்றப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, சுமார் 89 லட்சத்து 89 ஆயிரத்து 673 ரூபாய் அளவிலான கணக்கில் வராத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என மொத்தமாக ஒரு கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 908 ரூபாய் அளவிலான கணக்கில் வராத பணம் அரசு அலுவலகங்களில் கைமாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, அடுத்தகட்டமாக தீவிர விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (27.08.2026) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர், வட்டாரப் போக்குவரத்து, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணமாக 28 லட்சத்து 24 ஆயிரத்து 945 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.