PulseNews
தமிழகம்

இனி உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. ஏன் தெரியுமா?

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு கேட்டு மனு அளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் இன்று முதல் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ., விஜய்-க்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான ம.விஜய், மக்களை சந்திக்க பொது இடங்களுக்கு செல்லும் போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இரு துப்பாக்கி ஏந்திய போலீசார் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ விஜய்க்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இருவரும் சுழற்சி முறையில் எம்எல்ஏ விஜய்-யுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் சட்டசபையில் முதன் முறையாக பேசிய போதே திமுக தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய சூழலில், எம்எல்ஏ விஜய்க்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.,

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இனி உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. ஏன் தெரியுமா?
PulseNews சுருக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம.விஜய், பொது இடங்களுக்குச் செல்லும்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரி மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு இன்று முதல் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu