PulseNews
தமிழகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கக் கோரிக்கை!

நேபாளம் நாட்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை மீட்டு, அவர் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, அவரது குடும்பத்தினர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முருகானந்தத்தின் நிலை குறித்துக் கேட்டறிந்து, அவரை பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்களிடம் இது தொடர்பாக எடுத்துரைத்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இது தொடர்பாக இப்பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நேபாள வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கக் கோரிக்கை!
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை மீட்டு, அவரை பத்திரமாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது குடும்பத்தினர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரியிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்டவரின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். முருகானந்தத்தை பாதுகாப்பாக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu